புதுவை வெண்முரசு கூடுகையின் சார்பாக, நவீன இலக்கிய கலையின் அடிப்படைகள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அறிவிப்பு.
நண்பர்களுக்கு வணக்கம்,
கதைகள் கவிதைகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட புதிய வாசகர்களுக்கு, அந்த ஆர்வத்தை இலக்கியக் கலை நோக்கில் திட்டவட்டப்படுத்திக்கொள்ள, நவீன இலக்கியத்தின் அடிப்படைகளை அறிமுகம் செய்துகொள்ள, ஐயங்களைக் களைந்துகொள்ள, வாசிப்பின் செல்திசையை தெளிவாக்கிக்கொள்ள, இலக்கிய வாசிப்பின் அரிச்சுவடி பற்றிய ஒருநாள் முகாம் புதுவையில் 04.02.2023 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணிவரை நடைபெற இருக்கிறது. இலக்கிய விமர்சகர்,கட்டுரையாளர் கடலூர் சீனு கலந்து கொண்டு முகாமை முன்னெடுப்பார்.
கலந்து கொள்ள விரும்புபவர்கள் கவனத்திற்கு
கலந்துகொள்ள கட்டணம் இல்லை
முகாமில் கலந்துகொள்பவர்களின் வயது 18 முதல் 35 க்குள்.
முதலில் தங்கள் பங்கேற்பை உறுதி செய்யும் 25 நபர்கள் மட்டுமே வகுப்பில் கலந்துகொள்ள இயலும் .
பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விதிமுறைகள் உண்டு.
காலை மாலை தேனீர் இடைவேளை, மற்றும் மதிய உணவு முகாமில் வழங்கப்படும் .
பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும், இயலாதவர்கள் மின்னஞ்சல் செய்யலாம்.
விண்ணப்பிக்க
https://forms.office.com/r/AhrSQPLEG5
குறிப்பு :
(தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாசிப்பு முகாம் நிகழும் இடம், பயிற்சி வகுப்பின் விதிகள் உள்ளிட்டவைகள் சார்ந்த அனைத்து விபரங்களும் மின்னஞ்சல் வழியே தெரிவிக்கப்படும்.)
தொடர்புக்கு :
மணிமாறன், 9943951908
தாமரைக்கண்ணன். 9940906244
மின்னஞ்சல்
mani.maran.abcd@gmail.com , lstvdesign@gmail.com
No comments:
Post a Comment