Wednesday, 30 July 2025

நானொரு தேனீ . 1. இராச.மணிமேகலை

 


அனைவருக்கும் வணக்கம்.'நானொரு தேனீ' யாக சுவைத்த தேன்துளிகளை இத்தளத்தில் வாரமொருமுறை பகிர இருக்கிறேன்.


 உவமை -வேல் போன்ற விழி

உருவகம்-விழிவேல்

படிமம்-விழி பாய்ந்தது

குறியீடு-வேல் அழுதது

உவமையின் செறிவு உருவகம்; உருவகத்தின் வளர்ச்சி படிமம்;  படிமத்தின் முதிர்ச்சி குறியீடு.  தொன்மம் -பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை மகாபாரதம், இராமாயணம் போல்வன. படிமம் கருத்தினை சொற்களால் ஓவியமாக்கி மனத்திரையில் வரைந்து காட்டுவது. நேரடியாக சொல்வதை விட மறைமுகமாக சொல்வதற்கு ஈர்ப்பு அதிகம்.

               உவமை   அவர்கள் மூளையில் விதையைப் போல்

 தூவப்பட வேண்டிய அறிவு ஆணியைப்போல் அறையப்படுகிறது.

           உருவகம்

எண்ணவலைப் பின்னும் மூளைச் சிலந்தி

ஆவேசப் புயல்களாலும் அசைக்க முடியாத ஆகாசப் பூ

           படிமம்

அக்கம்பக்கம் வசந்தமில்லை

சோகத்தோடு அமர்ந்திருக்கிறது

சவத்தின் மீதொரு பட்டாம்பூச்சி.

          குறியீடு

 வேட்டி சட்டை வெளியே காய்கிறது

உள்ளே இருந்தவன் உள்ளே காய்கிறான்

         தொன்மம்

மதுரையை எரிக்கக் கண்ணகியாயும் மீண்டும் எழுந்திடச் சீதையாயும் எப்பவும் எரிதழல் மடிசுமப்பது

இனி எங்கள் வேலையல்ல

நிகழ்சி நிரல்

  நிகழ்ச்சி நிரல் . minute to  minute chart  வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026 முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை ...