Friday, 20 February 2026

புதுவை வெண்முரசு கூடுகை 91 கணியன்@புஷ்நாதன் உரை எழுத்து வடிவம்

 






நேற்றைய விவாதத்தில் என் தரப்பில் விடுபட்டவைகளில் சில



ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப

புணர்ந்தோர் பூ அணி அணியபிரிந்தோர் பைதல் உண்கண் பனி வார்பு 

உறைப்பபடைத்தோன் மன்ற அப்பண்பிலாளன்!

இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே,

                                       --பக்குடுக்கை நன்கணியார்

இவர் பாடி புறநானூற்றில் 194வது பாடலாக இடம் பெற்றுள்ளது.ஒரு தெருவில் ஒரு வீட்டில் இறப்பு நடந்து பறைஇசை ஒலிக்கிறது.அதே தெருவில் திருமண மங்கல இசை ஒலிக்கிறதுஇப்படி ஒரு முரண்பாட்டோடு இவ்வுலகை பாடைத்த அக்கடவுள் பண்பில்லாதவன். இவ்வுலக வாழ்க்கை அடிப்படையில் துன்பமானது இதன் இயல்புணர்ந்தோர் வாழ்வில் இன்பங்களை மட்டுமே காண்பர்.

நேற்றைய அமர்வின் மையச்சரடு இந்த பாடல்தான் என்று தோன்றுகிறது.

ஜராசந்தன் இந்த பாடலின் வழிதான் செயலாற்றுகிறான். கொடூரமாக வேட்டையாடும் சிங்கம் தன் இறப்பும் கொடூரமாகத்தான் இருக்கும் என்பதற்கு அஞ்சி ஒருபோதும் அதன் கொடூரத்தை இழப்பதில்லை. அப்படி இழந்தால் சிங்கம் சிங்கமாக இருக்காது. தன் உடலும் ஒரு நாள் போர்க்களத்தில் குத்திக் கிழிக்கப்படும் என்பதை உணர்ந்ததால். ஒருவனை கொடூரமாக கொள்வதில் என்ன தவறிருக்கிறது என்ற வகையில்தான் ஜராசந்தன் செயல்படுகிறான். 

மற்றொரு விஷயம் நம் பார்வைக்குத்தான் சிங்கத்தின் செயல்பாடு கொடூரமாக தெரிகிறது. காட்டில் ஒவ்வொரு விலங்கின் வேட்டையாடும் தன்மையும் மாறுபட்டிருக்கிறது. சிங்கத்தின் கொடூரத்திற்கு இணையானது  பல்லி பூச்சிகளை பிடித்து உண்ணுவது. சிங்கம் அதன் உடல் வலிமைக்கு ஒன்றை செய்கிறது. பல்லி அதன் வலிமைக்கு ஒன்று செய்கிறது. தசைவலிமை உள்ளவன் ஓங்கி அறைந்து கொள்கிறான். சிந்திப்பவன் விஷம் வைத்து கொள்கிறான். இன்னும் இன்னும் உட்சென்று சிந்தித்தால் இயற்கை ஒவ்வொரு உயிரும் வாழ ஒவ்வொரு உணவு மற்றும் புணர்ச்சி முறையை அளித்திருக்கிறது. அதை சரி என்றோ தவறென்றோ எப்படி நாம் தீர்மானிப்பது. குழந்தை வேண்டும் என்றால் காமம் சார்ந்த வழிமுறைகள் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உலக உயிர்கள் அதில் ஈடுபட்டுத்தானே ஆகவேண்டும். பழங்குடிகளுக்கும் நமக்கும் எந்த வேறுபாடுமில்லை என்றுதான் தோன்றுகிறது. அவன் நேரடியாக மனிதனை கொள்கிறான். ஒரு மனிதனின் இறப்பு உடலால் நிகழ்வதல்ல மனத்தால் நிகழ்வது. அப்படி பார்க்கையில் நாம் அன்றாடம் சக உயிர்களை எத்தனை முறை மனத்தால் ஒருவரை கொன்று குவிக்கிறோம். ஆனால் அவன் காட்டுவாசி நாம் பண்பட்டவர்கள் அப்படித்தானேஅப்படி பார்த்தால் மிருகங்களைவிட நாம்தான் கேவளமானவர்கள்.அறிவுக்காக மரங்களை அழிக்கிறோம்,தேவைக்காக(தேவைக்கு அதிகமாவே) இயற்கையை அழிக்கிறோம்அதிகாரத்திற்காக நாட்டை அழிக்கிறோம்.

இட்லர் வதைமுகாம்களில் அத்தனை உயிர்களை கொன்றது தவறுதான். அப்படி அடைக்கப்பட்டவர்கள் உடல்கள் மீது எத்தனை மருத்துவ ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆராய்ச்சியில் பல உயிர்காக்கும் மருந்துகள் கண்டுப்பிடிக்கப்பட்டு இன்று அதன் மூலம் எத்தனை உயிர்கள் காப்பாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

அறம்ஞாயம்தர்மம் இவையெல்லாம் மனிதனை விலங்கு நிலையலிருந்து ஒரு படி உயர்த்திருப்பது எந்த அளவிற்கு உண்மையோஅதே நேரத்தில் அவை பல காரியங்களை தள்ளிப்போட்டிருக்கிறது. பீஷ்மர் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று தன் தந்தைக்கு செய்த சத்தியம் போர்வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இப்படி பாரதத்தில்  எத்தனை சத்தியங்கள்கொள்கைகள். இத்தனை நியாய தர்மங்கள் பேசிஅறம் பேசிசத்தியம் பேசிஇறுதியில் பெரும் மானுட அழிப்பை நிறுத்த முடியவில்லையே. இதிலிருந்தே நம்மால் நம்மிலிருக்கும் விலங்கத் தன்மையை அழிக்கமுடியவில்லை என்பதுதானே நிர்வாணமாய் தெரிகிறது. உக்ரைன் ரஷ்யாஇஸ்ரேல் பாலஸ்தீனப் போர் எல்லாம் அரசியல் ராஜதந்திரம் என பேசி பெருமைப்பட்டுக்கொள்ளும் அறிவானமிருகங்கள் தானே நாம். விளையாட்டுக்கூட உடம்பை வலிமையாக்குகிறதுமனநலனை மேம்படுத்துகிறது என்பதையெல்லாம் கடந்து அடுத்தவன் தோல்விதானே நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறது. உண்மையில்நான் வெற்றிப்பெற்றேன் என்று ஒரு விளையாட்டு வீரன் மகிழ்ச்சிக்கொள்வதில்லைநாம் எத்தனை பேரை தோற்கடித்துள்ளோம் என்பதில்தான் கர்வம் கொள்கிறான். இப்படியாக அரசியல்பொருளாதாரம்வணிகம்விளையாட்டுகுடும்பம் என எல்லாவற்றிலும் நம் கையாளும் கயமைகளை எத்தனை எத்தனை. 

முரணியக்கமாக இவ்வுலகை படைத்த அப்பண்பிலாளனை என்ன சொல்வது. இன்னாது அம்ம இவ்வுலகம்அதன் இனிமை காண்போம் இலக்கியம் வழியாக....

                           நன்றி....

                                                  

No comments:

Post a Comment

நிகழ்சி நிரல்

  நிகழ்ச்சி நிரல் . minute to  minute chart  வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026 முதல் அமர்வு மாலை 5:30 முதல் மாலை 6:30 மணிவரை ...